விதைகளில் சிறியது கடுகு. ஆனால், அது முளைத்து வளரும்போது பெரிதாகி மரமாகி விடும். அதன் கிளைகளில் பறவைகள் தங்கி இளைப்பாறும். ""கடுகின் மாற்றத்தை போன்று விண்ணரசின் வல்லமை அளவிடமுடியாதது, எனக் கூறினார் இயேசு. மற்றொரு முறை பேசும்போது,""விண்ணரசு என்பது, கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் நல்லவற்றை கூடைகளில் சேர்த்து வைப்பர். கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே, உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று, நேர்மையாளரிடையே இருந்து தீயோரைப் பிரிப்பர். பின் அவர்களை தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும், அங்கலாய்ப்பும் இருக்கும், என்றார். தீய செயல்களில் ஈடுபடுபவது யாராக இருந்தாலும், அழுகிய, பயன்படாத மீன்களைப் போன்று வெளியே வீசி எறியப்படுவர் என்பதை எளிமையான உவமைகளின் மூலம் பிறரிடம் தெளிவுபடுத்தினார். அளவில்லா செல்வத்தை சேர்ப்பதை விட, புண்ணியம் செய்வதன் மூலம் சேர்த்து வைக்கும் செல்வமே நிம்மதியைத் தரும்.