மதுரை: அலங்காநல்லூர் காளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழா, வெள்ளிக்கிழமை மாலை இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்கி, கரகம் அலங்கரிக்கப்பட்டு இரவு பூஜை நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மா விளக்கு எடுத்து அம்மனை தரிசனம் செய்தனர்.