பூக்குழி திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2013 11:12
போடி: நாகலாபுரம் கிராமத்தில் 22ஆம் ஆண்டு பூக்குழி திருவிழா ஐயப்ப மற்றும் முருக பக்தர்கள் சார்பில் சனிக்கிழமை தொடங்கியது. காலையில் ஐயப்பன் ஆசிரமம் திறக்கப்பட்டது. பின்னர் பாலசாஸ்தா இன்னிசை குழுவினரின் இசை கச்சேரி நடைபெற்றது. மாலை சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனையடுத்து 21 அடி நீளம் 3 அடி அகலத்தில் ஆழி உருவாக்கப்பட்டது. பூக்குழி விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.