பொன்னமராவதி: மண்ணில் புதைந்து கிடந்த சாமி சிலைகள் நேற்று கண்டெடுக்கப்பட்டன. புதுக்கோட்டை, பொன்னமராவதி அருகேயுள்ள ரெட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, திங்கள்கிழமை ஆடு மேய்க்கும்போது மண்ணுக்குள் புதைந்து கிடந்த 15 சாமி சிலைகளை கண்டெடுத்துள்ளார். இத்தகவலை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் விவசாயி வீட்டிலிருந்த 15 சாமி சிலைகளை கைப்பற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.