பரமத்தி வேலூர்: கு.அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். கோயிலில் பொங்கல் மாவிளக்கு பூஜையும், வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.