Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தங்க அங்கி அணிவித்து ஐயப்பனுக்கு ... சபரிமலை மண்டல காலம் நிறைவு: டிச., 30ல் மீண்டும் நடைதிறப்பு! சபரிமலை மண்டல காலம் நிறைவு: டிச., 30ல் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
செயல்படாத ஆன்- லைன் புக்கிங்: அய்யப்ப பக்தர்கள் ஏமாற்றம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2013
03:12

திருப்புத்தூர்: சபரிமலை செல்லும் பக்தர்கள், ஆன் லைன் புக்கிங் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்திலிருந்து,சபரிமலை செல்லும் பக்தர்கள், வழக்கமாக,கார்த்திகை முதல்தேதி, மாலை அணிந்து,விரதம் துவங்குவர்.நாற்பது நாட்கள் விரதம் முடிந்தவுடன் மலைக்கு செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, ஆன்-லைன் மூலம் பதிவு செய்து, போட்டோவுடன் கூடிய டோக்கன் பெற்று சபரிமலை செல்கின்றனர். காத்திருக்காமல், நெரிசல் இல்லாமல், குறிப்பிட்ட நேரத்திற்கு தரிசனம் கிடைத்தது. தங்கள் பயணத்தேதியை நிர்ணயிக்க,பல வாரங்களுக்கு முன்பாகவே, ஆன்- லைன் மூலம் புக்கிங் செய்ய முயன்றனர். ஆனால் புக்கிங் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆன் லைன் பதிவிற்கான , தீதீதீ.ண்ச்ஞச்ணூடிட்ச்டூச்ணு.ஞிணிட்  என்ற இணையதளத்தில்,  அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை, ஒரு மணிக்கு ஒரு ஸ்லாட் வீதம், 16 ஸ்லாட்கள் உள்ளன.விருப்பப்பட்ட நாளைத் தேர்வு செய்து, விருப்பப்பட்ட நேரத்திற்கான ஸ்லாட் தேர்வு செய்து,போட்டோவுடன், அடையாள அட்டை எண்ணுடன் பதிவு செய்தால், தரிசன வரிசைக்கான டோக்கன், பக்தர் படத்துடன் கிடைக்கும்.குறிப்பிட்ட நேரத்திற்கு, இரண்டரை மணி நேரத்திற்கு முன்னதாக, பம்பையிலிருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்லும் வரிசைக்கு இந்த டோக்கன் பயன்படும். கடந்த ஆண்டுகளில், அனைத்து தேதிகளிலும் பக்தர்கள் பதிவு எளிதாக இருந்தது.இந்த ஆண்டு, டிசம்பர்,ஜனவரி ஆகிய இரண்டு
மாதங்களுக்கு சில நாட்களில் மட்டுமே, பதிவுக்கான ஸ்லாட்கள் திறந்திருந்தன.அதுவும் மகர ஜோதிக்குப் பின்னர் உள்ள நாட்களே.சில நாட்களில் மட்டும் சில நிமிடங்கள்,மட்டும் குறிப்பிட்ட நாட்கள்,சில ஸ்லாட்கள்திறக்கப்படுகின்றன.இதனால்,பக்தர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். கிடைத்த தேதிகளில் பதிவு செய்து விட்டு, வேறு தேதிகளில் பயணம் செய்தவர்கள் பலர்.பதிவான பக்தர்கள் எண்ணிக்கையும்,வருகை தந்த பக்தர்கள் எண்ணிக்கையும் பெரும் மாறுபாடாகியது. வரும் பக்தர்களின் எண்ணிக்கையை தெரிந்து, மணி வாரியாக சீரான வரிசையை ஏற்படுத்த, கேரளா போலீசார் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி, இந்த ஆண்டு முற்றிலுமாக தோல்விடையந்துள்ளது. காரணம்,விருப்பப்பட்ட நாட்களில் பதிவு செய்வதற்கான வசதி தொடர்ந்து இல்லாததே. அதற்கான நடவடிக்கையை எடுக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜை கடந்த 17ல் துவங்கியது. இதையொட்டி, 16ம் தேதி மாலை ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதற்கு அதிருப்தி தெரிவித்த கேரள ... மேலும்
 
temple news
சபரிமலை: கேரள மாநிலம், சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய முதல் இரு நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
சபரிமலை செல்லும் பக்தர்கள்: மாசடைந்த நீரில் குளிக்க வேண்டாம்: சென்னை: ‘‘மூளையை தின்னும் அமீபா நோய் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் தற்போது கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி வருகிறது. 8 மணிநேரத்திற்கு மேலாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar