பதிவு செய்த நாள்
06
ஏப்
2011
05:04
மனம் : முதுகெலும்பு அடி வயிறு தொடைப்பகுதி
மூச்சின் கவனம் : கால்களையும் உடலையும் உயர்த்தும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, விடும் போது வெளிமூச்சு
உடல் ரீதியான பலன்கள் : உடலை மெலிய வைத்து சுறுசுறுப்பு ஆக்குகிறது. இடுப்பை வளைக்க உதவும் ரெக்டி தசைகள் நன்கு ஆரோக்கியம் அடைகின்றன. வயிற்றுப் பகுதியில் உள்ள அதிகக் கொழுப்பு குறைகின்றது. இரத்தக்குழாய் சுத்தமடையும். முதுகு எலும்பு நன்கு வலுப்பெறும். அட்ரினல் சுரப்பி நன்கு வலுப்பெறும். அடிவயிற்றுக்கு நல்ல அழுத்தம் கிடைத்து மலம் மலக்குடலுக்குத் தள்ளப்படும். இனப் பெருக்க மண்டலம் வலிமை பெறும்.
குணமாகும் நோய்கள் : சுவாசக் கோளாறுகள், முதுகுவலி, மூட்டு சம்பந்தமான நோய்கள், நீரிழிவு, இரைப்பை, குடல் சம்பந்தமான பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு நல்லது. ஜீரண சக்தியினை அதிகப்படுத்துகின்றது. மாதவிடாய்ப் பிரச்சனைகள் தீரும். தூக்க மின்மை விலகும்.
ஆன்மீக பலன்கள் : சோம்பலை நீக்கி உடலை சுறுசுறுப்பாக்குகிறது.
எச்சரிக்கை : குடல் வாயு மற்றும் அதிக இரத்த அழுத்தக்காரர்கள் இந்த ஆசனத்தைச் செய்தல் கூடாது. ஆசன நிலையில் ஆடக்கூடாது. இதய நோயாளிகள் இந்த ஆசனத்தை ச் செய்தல் கூடாது.