கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில், ஹெத்தையம்மன் திருவிழா "மறு அணா என்ற நிகழ்ச்சியுடன் இன்று நிறைவடைகிறது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா, கடந்த 16ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. முக்கிய விழா, 22 மற்றும் 23ம் தேதிகளில் ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள பல கிராமங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில், அம்மன் அருள்வாக்கு, காணிக்கை செலுத்துதல் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.கோவில்களில் இரவு கத்திகை நிகழ்ச்சியை அடுத்து, நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இவ்விழாவின் நிறைவு நாளான இன்று ஹெத்தையம்மன் கோவில்களில் நடக்கும்"மறு அணா என்ற நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.