புதுச்சேரி: அங்காளம்மன் கோவிலில், அமாவாசையை யொட்டி தீச்சட்டி ஊர்வலம் நடந்தது. முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி நேற்று இரவு தீச்சட்டி ஊர்வலம் நடந்தது. நூற்றுக்கும் மேற் பட்ட பெண்கள், தீச்சட்டிகள் ஏந்தி, கோவிலை வலம் வந்து, பக்தி பரவசத்துடன் மகா தீபம் ஏற்றினர். முருங்கப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.