பதிவு செய்த நாள்
07
ஏப்
2011
11:04
ஓய்வாசனம் சவாசனம் (முழுமையான தளர்வுப் பயிற்சி)
தூங்கிக் கண்டார் சிவலோகம் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகம் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவயோகம் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வ தெவ்வாறே
-திருமூலர்
சவ என்றால் பிறம். உச்சந்தலையில் உடல் ஒரு சவம் போன்று தோன்றுகிறது. இந்த ஆசனம் செய்வோர் உள்ளேயும், வெளியேயும் ஏற்படும் எல்லாத் தூண்டுதல்களுக்கும் ஆட்படாமல் எந்த எதிர்ச் செயலுமின்றி பிணம் போல் ஆக வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
மனம் : கால் கட்டை விரல்களில் துவங்கி மற்றும் உடல் முழுவதும் பரவி இறுதியில் மூளை (தலை) வரை
மூச்சின் கவனம் : ஆழ்ந்த மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : ஆசனங்கள் முடித்த பின் கண்டிப்பாக இந்த ஆசனம் செய்ய வேண்டும். 5 முதல் 20 நிமிடம் வரை செய்யலாம். அற்புதமான பலன்களைக் கொடுக்கக்கூடியது. மூளைக்கு நல்ல ஓய்வு. உடல் முழுவதையும் உறுதிப்படுத்தி ஊக்கமளிக்கிறது. எல்லாத் தசைகளும் மூட்டுகளும் தளர்த்தப்படுகின்றன. தினமும் இருவேளை செய்யலாம். பிரணாயாமம் செய்வதற்கு உடல் ஏற்றதாகிறது. 30 நிமிடப் பயிற்சி 3 மணி நேர ஆழ்ந்த தூக்கத்திற்கு சமமாகிறது.
குணமாகும் நோய்கள் : அதிக இரத்த அழுத்தம், மனஇறுக்கத்தால் உண்டாகும் தலைவலி ஆகியவற்றால் ஏற்படும் மனநோய் பிரச்சனைகளுக்கு வெகுவாக பலன் அளிக்கிறது. தூக்கமின்மை, சர்க்கரை நோய், இதயநோய், வலி உபாதைகள், நினைவாற்றல், இயலாமை மற்றும் பலவற்றிற்கு இது அற்புதமருந்து. களைப்போ சோர்வோ இருக்கும் போது இப்பயிற்சியினைச் செய்யலாம். ஒலிநாடாவின் உதவியுடனும் செய்யலாம்.
ஆன்மீக பலன்கள் : மனம் ஆழ்ந்த ஓய்வைப் பெறும். அந்தரங்க யோகப் பயிற்சிக்கு வெகுவாக பயன்படுகின்றது. செய்பவரின் உடல் நலனை அதிகரிக்க செய்கிறது. பஞ்சகோசங்களையும் சுத்திகரிக்கும் ஆசனம் இது. வயது, உடலின் நிலை போன்ற வரம்பின்றி அனைவரும் பயிற்சி மேற்கொள்ளலாம். செய்யும் நேரம் முழுமையும் சுவாசம் மெதுவானதாக, ஆழமானதாக, ஓய்வாக, சீரானதாக ஏககாலத்தில் நிகழ்கிறது. சவாசனம் மல்லாந்து படுத்திருக்கும் நிலைமட்டுமல்லாது வேறு சில நிலையிலும் செய்யலாம். (ஆசிரியரை அணுகவும்)
கிரியாக்கள் 1, 2, 3, 4, 5, 6 என ஆறு வகைப்படும்.
1, கபாலபதி
2. திராடகள்
3. நேத்தி
4. தௌத்தி
5. நௌலி
6. பஸ்தி- என ஆறு வகைப்படும்.
பந்தங்கள்:
1. தொண்டை குழி அடைத்தல்
2. ஆசன வாய் சுருக்கி அடைத்தல்
மூச்சு நிலை - உள்ளிழுத்து கும்பகத்தில் நிறுத்துதல்
தொண்டைக்குழி மற்றும் மூலாதாரத்திற்கு இடையில்
பலன்கள்: உடல் சூடு அதிகரிக்கும். நரம்பு மண்டலம் வலிமையடையும். தைராய்டு உமிழ்நீர்ச் சுரப்பிகள் நன்கு செயல்படும். மலச்சிக்கல் நீங்கும். அடங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியினை எழுப்பும்.
1. கபாலபதி : மூக்குத் துவாரங்களில் உள்ள தூசிகள் அகன்று ஆஸ்துமா சளி தொல்லை நீங்கும். நுரையீரலில் உள்ள கார்பன்-டை ஆக்சைடு வெளியேறும். மூளையில் உள்ள செல்களைத் தூண்டும்.
எச்சரிக்கை : இதயக்கோளாறு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் செய்யக்கூடாது. அறுவை சிகிச்சை செய்தவர்கள் 6 மாதம் வரை செய்யக் கூடாது.
2. திராடகம்: கண்களை சுத்தப்படுத்தி பார்வைத் திறனை அதிகரிக்க செய்யும் பயிற்சி
3. நேத்தி: மூக்குப் பாதையினைச் சுத்தப்படுத்தும் பயிற்சி
4. தௌதி: வயிறு வரை உள்ள உணவுப் பாதையினை தூய்மைப்படுத்தும் பயிற்சி
5. நௌலி: அடிவயிறு குடல்களைக் கட்டுப்படுத்துதல்
6. பஸ்தி: ஆசனத் துவாரத்தையும் மலக்குடலையும் நீரால் சுத்தம் செய்யும் முறை.