பொங்கலூர்: விண்ணளந்த பெரிய பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு அனுமன் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் விண்ணளந்த பெரிய பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.