கோபிசெட்டிபாளையம்: கோபி, மேவாணியில் தர்மசாஸ்தா கோவில் உள்ளது. ஐயப்ப ஸ்வாமியின் உருவ சிலையை, பவானி ஆற்றில் வைத்து நீராடல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.கோவிலில் இருந்து ஐயப்பன் ஸ்வாமி, அலங்காரத்துடன் ஆற்றுக்கு அழைத்து செல்லப்பட்டார். சிறப்பு பூஜைகள் செய்த பிறகு, ஐயப்ப பக்தர்கள் ஸ்வாமியின் உருவ சிலையை ஆற்றில் நீராட்டினர். தொடர்ந்து புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை மற்றும் தீபாராதனை, ஊஞ்சல் சேவை, திருத்தேர் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தன. நேற்று காலை, 8 மணிக்கு பல்வேறு மூலிகை பொருட்கள் மற்றும் பழ வகைகளால் மகா அபிஷேகம், புஷ்பாபிஷேகம் நடந்தது.