விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆண்டாள், பாவை நோன்பு இருப்பதற்காக, பெருமாளிடம் நியமனம் பெறும், பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஆண்டாளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. ஆண்டாள் மூலஸ்தானத்திலிருந்து மாடவீதி வழியாக பெரிய பெருமாள் சன்னதியை சேர்ந்தார். பெரிய பெருமாள் சன்னதியில் ஆண்டாள் ஏகாந்தத் திருமஞ்சனம், ஆண்டாள் கைத்தல சேவை முடிந்து பெரிய பெருமாள் மூலஸ்தானத்திற்கு சேருதல் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவை தொடர்ந்து ஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் இன்று தொடங்குகிறது.