ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்: திடீர் ஆய்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2014 12:01
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் சுந்தரராஜ் வியாழக்கிழமை திடீர் ஆய்வு செய்தார். ராமேஸ்வரத்தில் நகராட்சி நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறை ஆகியவை சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை எனப் பக்தர்கள் புகார் அளித்து வந்தனர். அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராட வரும் பக்தர்கள் கடற்கரையில் விட்டுச்செல்லும் ஆடைகள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை தினமும் துப்புரவுப் பணியாளர்கள் மூலம் அகற்றிடவும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், திருக்கோயில் காவல் நிலைய வளாகத்தில் தேங்கியுள்ள கழிவு நீரை உடனே அகற்றிடவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.