திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியை முன்னிட்டு நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை வைகுண்ட வாசல் திறக்கப்பட உள்ளது. தேவையான முன்னேற்பாடுகளை திருமலை - திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. அடிப்படை வசதிகளான தங்கும் வசதி, குடிநீர், போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. லட்டு பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைக்க 5 லட்சம் லட்டுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.