திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, திருக்கண்ணமங்கை,மணக்கால், தில்லைவிளாகம் மற்றும் நீடாமங்கலத்தில் சிறப்பு வாய்ந்த பெருமாள் கோவில்கள் உள்ளது. இக்கோவிலில் கடந்த 1ம்தேதி பகல் பத்து உற்சவம் துவங்கியது. நேற்று 10ம்தேதி வரை பகல் பத்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (11ம் தேதி) வைகுண்டா ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.