திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள கோவில்களில் மார்கழி மாதம் முழுவதும் திருவிளக்கு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று மார்கழி மாத நிறைவு திருவிளக்கு வழிபாடு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். பழனிரோடு செல்லாண்டியம்மன் கோவிலில் நடைபெற்ற மார்கழி மாத நிறைவு நாள் வழிபாட்டில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின் விளக்கு பூஜை நடைபெற்று அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.