கூடலூர்: சிவன் மலையை பவுர்ணமி நாளில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று தரிசித்து வருகின்றனர். கிரிவல தரிசனம் செய்வதால் வேண்டு தல்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் கருதுகின்றனர். இதனால் இன்று (புதன்கிழமை) தை மாத பவுர்ணமி கிரிவலம் மாலை 4 மணிக்கு தொடங்கியது. அதனை தொடர்ந்து சிவன் மலை உச்சியில் உள்ள சிவலிங்கம்– நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங் கள், ஆராதனைகள் நடைபெற்றது.