ஆனைமலை: ஆனைமலை காமாட்சியம்மன் கோவிலில் திருவிழா வரும் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆனைமலையில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலின் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 22ம் தேதி இரவு 7.00 மணிக்கு கும்பஸ்தாபனமும், 23ம் தேதி காலை 10.30 மணிக்கு அம்மன் திருக் கல்யாணமும், மாவிளக்கு எடுத்த லும், 24ம் தேதி காலை 10:00 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை 6.00 மணிக்கு பூவோடு எடுத்தலும், வாண வேடிக்கையும் நடக்கிறது. 25ம் தேதி காலை மகா அபிஷேகமும், மாலை 3.00 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராடுதலும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.