கொடைக்கானல்: பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோயில் விழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோயிலில் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழாவினை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் கொடிக்கம்பத்திற்கு தீப ஆராதனையும் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.