புளியங்குடி: பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.இக்கோயிலில் ஜன. 8-ம் தேதி தைப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பாலசுப்பிரமணிய சுவாமி 11 சுற்றுகள் தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.