பதிவு செய்த நாள்
22
ஜன
2014
11:01
அத்திமாஞ்சேரிபேட்டை: துணை மின்நிலையத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிபேட்டை, அண்ணா நகர் பகுதி, துணை மின்நிலைய வளாகத்தில், வரசித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன், மின்நிலைய ஊழியர்கள் இணைந்து, இந்த கோவிலை கட்டினர். பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த இந்த கோவிலை புதுப்பிக்கும் பணியில், மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது, சீரமைப்பு பணிகள் முடிந்து நாளை (வியாழன்) காலை 8:30 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை ௬:௦௦ மணியளவில், உற்சவர் வீதியுலா வருகிறார். இதேபோல், பஜார் வீதி கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகமும் நாளை காலை நடைபெற உள்ளது.