திண்டுக்கல்: என்.ஜி.ஓ.,காலனியில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கோயில் தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். திண்டுக்கல் ஒன்றிய துணை தலைவர் லோகநாதன், தமிழ்நாடு ஹாக்கி சங்க துணை தலைவர் ஞானகுரு, கோயில் செயலாளர் குணசேகர், பொரு ளாளர் பால்பாண்டி முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., கிளை செயலாளர் ஜீவானந்தம், சீலப்பாடி ஊராட்சி உறுப்பினர் கோவிந்தராஜ், சி.பி.ஐ., வட்ட செயலாளர் மாரிமுத்து, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் குருசாமி கலந்து கொண்டனர்.