சாணார்பட்டி: சாணார்பட்டி வேம்பார்பட்டியில் மழை வேண்டி கிராம மக்களால் இரண்டு நாட்கள் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் லலிதா மகிளாசமாஜம் யோகினிகள் குழுவினர் சார்பில் கணபதி ஹோமம், குத்துவிளக்குப் பூஜையும் நடந்தது. தொடர்ந்து மகாசண்டி யாகம், நவசண்டியாகம் உட் பட 13 வகையான யாகங்கள் நடந்தன. நத்தம் தொகுதி செயலாளர் கண்ணன், ஒன்றியச் செய லாளர் ராமராசு, ஊர் பட்டரைதாரர்கள் கண்ணுமுகமது, மணிவண்ணன், லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பிச்சால், ஹரிகரன், வெங்கடேஷன் உட்பட பலர் செய்திருந்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.