Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு ... நன்மையில் முடிந்த முனிவரின் சாபம்! நன்மையில் முடிந்த முனிவரின் சாபம்!
முதல் பக்கம் » துளிகள்
ஆடம்பரத்துக்கு மயங்காத மாயகண்ணன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜன
2014
02:01

ஈசன் அறியும் ராப்பகலும், தன்னை, பாசத்துடன் வைத்து பரிசறிவார்களை... என்று திருமூலரும், ஆடை, அணிகலன் ஆடம்பரங்களை, ஆண்டவன் விரும்புவதில்லை என்று கண்ணதாசனும் கூறுவர். அன்போடு தன்னை நினைப்பவரையும், தனக்கு விழா கொண்டாடுவோரையும் அவன் கைவிடுவதில்லை. அவரவருக்கு செய்ய வேண்டியதை அவன் செய்து கொண்டு தான் இருக்கிறான். மைசூரில், மிகப்பெரிய மாளிகையில் பிறந்தவர் ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர், இறைவன் மேல் கொண்ட பக்தியின் காரணமாக தன் மாளிகையையும், சொத்துகளையும், பொதுமக்களுக்கு தானம் அளித்து விட்டு, ஊர் ஊராக சென்று இறைநாமத்தை பரப்பி, உபந்யாசங்கள் செய்து வந்தார். திருவிசலூரில், வெங்கடேச ஐயாவாள் தங்கியிருந்த போது அவருடைய உபந்யாசங்களையும், நாம மகிமையையும் கேட்டு, மக்கள் ஆனந்தப்பட்டனர். அப்போது, அந்த ஊரில் இருந்த சிலர், மிக ஆடம்பரமாக, கோகுலாஷ்டமி விழா கொண்டாடினர்; கண்ணன் படத்தை ஊர்வலமாக கொண்டு வந்தனர். ஊர்வலம், ஸ்ரீ ஐயாவாள் வசித்த, குடிசை வீட்டை நெருங்கிய போது, கண்ணனை தரிசிக்கும் ஆவலில், வெகு வேகமாக வெளியே வந்தார் ஸ்ரீ ஐயாவாள்.

அவர் மீது பொறாமை கொண்ட ஊர்வலக்காரர்களோ, பக்தியில்லாத உங்கள் தீபாராதனைக்காக, கண்ணன் காத்திருக்கவில்லை. உங்கள் வீட்டில், தீபாராதனை எடுக்க முடியாது... என்றனர். ஸ்ரீஐயாவாளோ அமைதியாக, என் பக்தியை பற்றி கண்ணனுக்கு தெரியும்... என்று கூறி, வீட்டினுள் சென்று விட்டார். ஊர்வலக்காரர்களோ, உங்களுக்கு பக்தி இருந்தால், எங்கே கண்ணனைக் கூப்பிடுங்கள்; வருகிறானா பார்க்கலாம்... என்று வம்பு செய்தனர். ஸ்ரீஐயாவாள், தயங்காமல், ஊர்வலத்தில் அவர்கள் சுமந்து வந்த படத்தில் இருந்த கண்ணன் படத்தை நெருங்கி, இந்தீவா எனும் ஸ்லோகத்தை மனமுருக சொல்லி, வீட்டின் உள்ளே சென்று விட்டார். ஊர்வலம் அடுத்த வீட்டு வாசலை நெருங்கியதும், படத்திலிருந்த கண்ணனை காணவில்லை; கண்ணாடியும் சட்டங்களும் மட்டுமே இருந்தன. ஊர்வலத்தில் வந்தவர்கள் நடுங்கிப் போய், ஸ்ரீஐயாவாளிடம் ஓடினர். அங்கே, அந்த படத்திலிருந்ததைப் போலவே, ஒரு கிருஷ்ண விக்ரகத்தை ஊஞ்சலில் வைத்து, மிகுந்த அன்போடு கண்ணனை புகழ்ந்து பாடி, துதித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீ ஐயாவாளின் தூய்மையான பக்தியைக் கண்டு, ஊர்வலம் நடத்தியோர், அவரிடம் மன்னிப்பு கேட்டனர். அடியாரின் பக்தியை வெளிப்படுத்துவதற்காக, கண்ணன் நடத்திய திருவிளையாடல் இது. கடந்த, 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 18ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர், ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர் கண்ணனை புகழ்ந்து பாடிய துதிப்பாடல், டோலோ நவரத்ன மாளிகா எனப்படுகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar