பதிவு செய்த நாள்
31
ஜன
2014
10:01
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள, பிரத்தியங்கிராதேவி கால பைரவர் கோவிலில், 108 கிலோ, பாகற்காய்களை வைத்து, யாகம் நடந்தது. இதில், வெளி நாட்டு பக்தர்களும் பங்கேற்றனர். தூத்துக்குடி, கோரம்பள்ளத்தில், பிரத்தியங்கிராதேவி கால பைரவர் சித்தர் பீடம் உள்ளது. அங்கு, 11 அடி உயரத்தில், ஒரே கல்லால் ஆன, பிரத்தியங்கிரா தேவி கால பைரவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, தை அமாவாசை தினமான, நேற்று, உலக மக்கள் சர்வ நோய் நீங்கி, சுகாதாரத்துடன் வாழ வேண்டி, யாகம் நடத்தப்பட்டது. சீனவாச சித்தர் தலைமை வகித்தார். மலேசியாவை சேர்ந்த, டத்தோ, செந்தில் நாதன், டத்தோ, கிருஷ்ணன், சீன நாட்டு பக்தை, பிரான்சிஸ்கா உட்பட, பலர் கலந்து கொண்டனர். யாகத்தில், 108 கிலோ, பாகற்காய், 108 கிலோ, வத்தல் மற்றும் திப்பலி, கண்டங்கத்திரி,ஏலக்காய், சுக்கு, மிளகு, வேப்பெண்ணெய் கொண்டு, யாகம் நடத்தப்பட்டது.