பதிவு செய்த நாள்
01
பிப்
2014
11:02
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் பாலமந்திர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் பாலமந்திர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பாலவிநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேகம் தமிழ் மரபுப்படி நாளை நடக்கிறது.இன்று காலை 9 மணிக்கு இறையானை பெறல், மூத்த பிள்ளையார் முதனிலை வேள்வி, நவகோள்கள் வழிபாடு, காப்புநாண் அணிவித்தல், மண்வழிபாடு, புனிதநீர் வழிபாடு, முளைப்பாரிகை வழிபாடு நடக்கிறது. மாலை 5 மணிக்கு தீபத்திருமகள் வழிபாடு, நிலபதிவேள்வி, முதற்கால வேள்வி, நிறையவி நல்கல், பெரும்பேரொளி வழிபாடு நடக்கிறது.நாளை காலை 7 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி விண்ணப்பம், கருவிக்குடவேள்வி, அருன்ஊட்கம் தத்துவ வழிபாடு, 8 மணிக்கு இரண்டாம்கால வேள்வி, குடங்கள் புறப்பாடாகி 9 மணியளவில் கும் பாபிஷேகம் நடக்கிறது.சென்னை தியாகராசன் குழுவினர் தமிழ் வேள்வியை முன்னின்று நடத்துகிறார். விழா ஏற்பாடுகளை பாலமந்திர் மெட்ரிக் பள்ளி தாளாளர் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.