மயிலாடுதுறை: நாகை மாவட்டத்தில் உள்ள சீர்காழிக்கு காளிபுரம் என்ற புராண பெயர் உள்ளது. பெயருக்கு ஏற்றபடி ஊர் முழுவதும் ஏராளமான காளிஅம்மன் கோயில் கள் உள்ளன.இவற்றில் பிடாரி தெற்கு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீபத்ரகாளிய ம்மன் கோயில் பிரசித்தி பெற்றது.இந்த கோயிலில் ஆண்டு தோறும் தீமிதி உற்சவம் 10 நாட்களுக்கு நடைபெ றும். இவ்வாண்டு உற்சவம் கடந்த 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி யது. முக்கிய திருவிழாவான தீமிதி உற்சவம் நேற்று நடந்தது.விழாவையொட்டி காலை பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேய, அலங்காலம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 10 மணிக்க ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்பாளை தரிசனம் செய்தனர்.
மாலை 3 மணிக்கு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது. தொடர்ந்து நாட்டாமை ராஜேந்திரன் தீச்சட்டி எடுத்து வந்து தீமிதிக்கான தீ போடப்பட்டது. இதையடுத்து பச்சை காளி, பவள காளி வீதியுளா நடைபெற்றது. இரவு 11 மணிக்கு கழுமலை ஆற்றிலிருந்து சக்தி கரகம் மற்றும் செடில் காவ டிகள் எடுத்துவரப்பட்டு 12 மணிக்கு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏ ராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்ததுடன்,சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ பத்ர காளியம்மனை தரிசனம் செய்தனர்.