பதிவு செய்த நாள்
03
பிப்
2014
11:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் எழுந்தரும் மர தேர்கள், 4.5 லட்சத்தில் துருப்பிடிக்காத இரும்பு கம்பியில் சாரம் அமைக்கும் பணி துவங்கியது. ராமேஸ்வரத்தில் நடைபெறும் மாசி தேரோட்டத்தில், ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்தினி அம்மன் மரதேர்களில் எழுந்தருளி வீதி உலா வருவர். சுவாமி, அம்மன் எழுந்தருளும் பீடம் வரை மரத்திலும், பீடத்தை சுற்றி பனை மரத்தில் சாரம் அமைத்து, தேர் துணியில் அலங்காரம் செய்வர். இதில், பனை மரங்கள், கம்பு அடிக்கடி சேதமடைந்ததால், தேரை புதுப்பிக்க 4.5 லட்சத்தில் இரு தேருக்கும், துருப்பிடிக்காத இரும்பு கம்பியில் சாரம் அமைக்கும் பணி, நேற்று துவங்கியது. இதன் பிறகு, சாரத்தை சுற்றி புதிய தேர் துணி பொருத்தப்பட்டு, அடுத்த மாதம் நடக்கவுள்ள மாசி தேரோட்டத்தில் புதுபொலிவுடன் வீதி உலா வர உள்ளதாக, கோயில் பணியாளர்கள் தெரிவித்தனர்.