திருப்போரூர்: காலவாக்கம் பழண்டியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருப்போரூர் அடுத்த காலவாக்கத்தில் கிராம தேவதை கோவிலாக பழண்டியம்மன் கோவில் உள்ளது. சிதிலமடைந்து இருந்த கோவிலை, கிராம மக்கள், திருப்பணிகள் செய்து சீரமைத்தனர். இதையடுத்து, இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை 9:00 மணியளவில் விமரிசையாக நடந்தது. அதன் பின்னர் மகா கும்பாபிஷேகமும், தீப ஆராதனையும் நடந்தது. முன்னதாக விழாவையொட்டி கடந்த 31ம் தேதி துவங்கி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.