பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள வீரதுர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை நேற்று நிறைவடைந்தது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் வடக்கு கிரி வீதியில் வீரதுர்க்கை அம்மன் கோயில் உள்ளது. 2025, நவ.10ல் பாலாலயம், முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. 2025,டிச.,7 வீரத் துர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மண்டல யாக பூஜைகள் தினமும் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று(ஜன.21) மண்டல பூஜை நிறைவு யாகம் நடைபெற்றது. அதன்பின் யாகத்தில் வைக்கப்பட்ட கலசத்தை வளாகத்தில் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் சிறப்பு அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது. நிகழ்ச்சியில் உதவி கமிஷனர் லட்சுமி, கண்காணிப்பாளர் ராஜா, உபயதாரர் ராஜேந்திரன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.