பதிவு செய்த நாள்
05
பிப்
2014
11:02
வத்திராயிருப்பு: சதுரகிரி மலை சந்தனமகாலிங்கசுவாமி கோயில், சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டது.இதில் பக்தர்கள் காணிக்கையாக, 27 லட்சம் ரூபாய் வசூலானது. இங்கு ஆண்டிற்கு, 4 முறை உண்டியல் திறக்கப்படும். ஆடி அமாவாசை விழாவிற்கு பின் தை அமாவாசையை முடிந்த பின், உண்டியல்கள் திறக்கப்படும். அதன்படி, மதுரை அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி, துணை ஆணையர் பச்சையப்பன், செயல்அலுவலர் குருஜோதி, ஆய்வாளர்கள் முன்னிலையில்,உண்டியல்கள் திறக்கப்பட்டது. சந்தனமகாலிங்கசுவாமி கோயிலில், தங்கம் உட்பட ரூ. 2.88 லட்சம், சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் தங்கம் உட்பட ரூ.23.77 லட்சம் வசூலானது. பணம் அணைத்தும், மூடைகளாக கட்டப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன்,மலை அடிவாரம் கொண்டுவரப்பட்டு, வங்கியில் செலுத்தப்பட்டது.