திருப்போரூர் : கண்ணகப்பட்டு, திரவுபதி அம்மன் கோவிலில், வரும் 9ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. திருப்போரூர் அடுத்த, கண்ணகப்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும் 9ம் தேதி, காலை 8:00 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக, 50 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.கும்பாபிஷேக பூஜைகள், 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்குகின்றன. தொடர்ந்து, வாஸ்து சாந்தி பூஜை மற்றும் யாக சாலை பூஜைகள் நடத்தப் படுகின்றன.