சாத்தூர்: தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், தை கடைசி வெள்ளிபெருந்திருவிழா இன்று நடக்கிறது. பக்தர்களின் வசதிக்காக, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர், சிவகாசி, சங்கரன்கோவிலில் இருந்து, இங்கு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தனபாலன், பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூஜாரி செய்துள்ளனர்.