வால்மீகி முனிவர் ஒருமுறை திருநீர்மலைக்கு தீர்த்த யாத்திரை வந்தார். அவர் மலைமேல் ஏறி ரங்கநாதர், நரசிம்மன், த்ரிவிக்ரமன் ஆகிய மூம்மூர்த்திகளையும் வணங்கி பின் மலையடிவாரத்தில் உள்ள சரஸ் தீர்த்தத்தில் கிழக்கு நோக்கி நின்று கொண்டு ராமனை தியானம் செய்ய, ரங்கநாதன் ராமனாகவும், லட்சுமிதேவி சீதா தேவியாகவும், சங்கு சக்கரங்கள் பரத, சத்ருக்னர்களாகவும், ஆதிசேஷன் லட்மணனாகவும், விஷ்வக்சேனர் சுக்ரீவனாகவும், கருடன் அனுமனாகவும் திவ்ய தரிசனம் தந்தனர். பின்னர் முனிவரின் பிரார்த்தனைப்படி நீர்வண்ணனாக அடிவாரத்தில் தாயாருடன் எழுந்தருளினார் பெருமாள்.