புதுச்சேரி நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2014 10:02
புதுச்சேரி: ஜெயராம் நகர் நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.சாரத்தில் அன்னை தெரெசா நகர், ஜெயராம் நகர் மற்றும் வெங்கடேஸ்வரா நகர் ஆகிய மூன்று பகுதிகளின் மத்தியில் நாகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 9.15 மணிக்கு சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நாகமுத்து மாரியம்மன் மூலஸ்தான விமான கும்பாபிஷேகமும், விநாயகர் முதலான பரிவார தேவதா கும்பாபிஷேகமும் நடந்தது.காலை 9.45 மணிக்கு நாகமுத்து மாரியம்மன் மூலவர் மகா கும்பாபிஷேகமும், விசேஷ நவாவரண பூஜைகளும் நடந்தது.