பதிவு செய்த நாள்
07
பிப்
2014
10:02
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் சுப்ரமணிய சுவாமி கோவில் தை பிரம்மோற்சவம், நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில், வரும் 12ம் தேதி, தேர் திருவிழாவும், 14ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. நேற்று, காலை 8:00 மணியளவில், சிறப்பு பூஜைகளுடன் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு, உற்சவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதியுலா வந்தார். இன்று, பூத வாகனத்திலும், நாளை சிம்ம வாகனத்திலும் உலா வருகிறார். வரும் 12ம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெறும். அன்று மதியம், 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து, 14ம் தேதி வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர் திருக்கல்யாணம் நடைபெறும்.