திட்டக்குடி: கொடிக்களம் செல்லியம்மனுக்கு 3 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளி கவசத்தை பக்தர்கள் காணிக்கையாக வழங்கினர். திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தில் செல்லியம்மன் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். ஆவினங்குடி தொழிலதிபர் ரமேஷ், கொடிக்களம் சண்முகநாதன் மற்றும் சில பக்தர்கள் செல்லியம்மனுக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ 650 கிராம் எடையுள்ள வெள்ளிக் கவசத்தை காணிக்கையாக வழங்கினர். நேற்று மதியம் 1:00 மணிக்கு சிறப்பு பூஜை செய்து செல்லியம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. திருஞானசம்பந்தம் குருக்கள் பூஜையை நடத்தினார்.