காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நேற்று ரதோற்சவம் நடந்தது. காஞ்சிபுரம் நகர பகுதியில், பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, கடந்த 6ம் தேதி முதல் மாசிமாத ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதில், ஏழாம் நாளான நேற்று ரதோற்சவம் நடந்தது. கோவிலுக்கு தேர் இல்லாததால், தேர் அலங்காரத்தில் செய்யப்பட்ட பல்லக்கில், உற்சவர் காமாட்சியம்மன், சரஸ்வதி, லட்சுமியுடன் காலை 9:00 மணிக்கு எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளில் வீதியுலா வந்த காமாட்சியம்மன், பகல் 11:00 மணிக்கு சங்கரமடம் அருகில் சாலையில், மாலை 4:00 மணிவரை பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், மாலை 5:00 மணிக்கு கோவிலுக்கு சென்றடைந்தார்.