பாலக்கோட்டில் நடந்த புதூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்தாண்டு கோவில் திருவிழா கடந்த 10ம் தேதி தொடங்கியது. நடைபெற்ற தீமிதி விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையொட்டி நடந்த ஊர்வலத்தில் ஏராள மான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.