வடமதுரை: வடமதுரை அருகே பல கிராமமக்கள், ஒன்று சேர்ந்து மழை பெய்ய வேண்டி கூட்டு வழிபாடு நடத்தினர்.வேலாயுதம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கே.புதூர், மூனாண்டிபட்டி, டி.புதூர், குரும்பபட்டி,வேலாயுதம்பாளையம் கிராம மக்கள், ஒன்று சேர்ந்து அருகிலுள்ள ஊற்றாங்கரைக்கு ஊர்வலமாக சென்றனர். அங்குள்ள கோயில் வளாகத்தில் கன்னிமார் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கு, மழை பெய்ய வேண்டி பொது பொங்கல் வைத்து, யாகம் வளர்த்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.