மசினகுடி: சொக்கநள்ளி மாரியம்மன் கோவில் பூக்குண்ட திருவிழா நடைபெற்றது. கோவிலில் நேற்று காலை ஏராளமான பக்தர்கள் ஆற்றில் நீராடி கங்கை பூஜை செய்து, ஊர்வலமாக பக்தி பரவசத்துடன் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று பூக்குண்டம் இறங்கினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபட்டனர்.