தேவகோட்டை: தேவகோட்டை ராமகிருஷ்ண வித்யாலயம் நடுநிலைப்பள்ளியில், ராமகிருஷ்ண ஜெயந்தி நடந்தது. வேதபாராயணங்கள், திருமுறைபாராயணம் நடந்தது. விழாவில் பிரேமப்ரியாம்பாள் தலைமை வகித்தார். பள்ளி செயலர் சோமநாராயணன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சீனிவாசன் வரவேற்றார். நாகப்பா குழும தலைவர் லட்சுமணன் பரிசு வழங்கினார். சிறந்த மாணவர்களுக்கான பரிசுகளை கவுன்சிலர் மும்தாஜ் வழங்கினார். நிர்வாக மேலாளர் கிருஷ்ணவேணி ஏற்பாடுகளை செய்தார்.