திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியலில் ரூ.35.33 லட்சம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதந்தோறும் உண்டியல்கள் எண்ணப்படும். இந்த வகையில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில், ரொக்கம் ரூ.35 லட்சத்து 33 ஆயிரத்து 8 இருந்தது. தங்கம் 62 கிராம், வெள்ளி 428 கிராம் இருந்தது. உண்டியல் திறக்கும் பணி கோவில் கமிஷனர் கல்யாணி மேற்பார்வையில் நடந்தது.