பதிவு செய்த நாள்
27
பிப்
2014
11:02
சென்னை : சென்னையில் உள்ள அனைத்து சிவன், முருகன், அம்மன் கோவில்களில் மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இன்று இரவு மூலஸ்தான மூர்த்திகளுக்கு நான்கு கால பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்கெங்கு? இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், விருபாட்சீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர், வாலீஸ்வரர் உள்ளிட்ட ஏழு சிவாலயங்கள், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி, கோயம்பேடு குறுங்காலீஸ்வரர், பொழிச்சலுார் அகத்தீஸ்வரர், அனகாபுத்துார் அகத்தீஸ்வரர், பாடி வலிதாயநாதர், செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார் திருநீற்றீஸ்வரர், புழல் திருமூலநாத சுவாமி, கொளத்துார் சோமநாத சுவாமி, அகத்தீஸ்வரர், மண்ணடி மல்லிகேஸ்வரர், பாரிமுனை தேவராஜா தெரு சென்ன மல்லீஸ்வரர், பாரிமுனை ஏகாம்பரேஸ்வரர், மண்ணடி கச்சாலீஸ்வரர், எம்.கே.பி.நகர், நெசவாளர் குடியிருப்பு ஈஸ்வரன், பாரிமுனை கந்தகோட்டம் முருகன், வேளச்சேரி தண்டீஸ்வரர், திரிசூலம் திரிசூல நாதர், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர், அயனாவரம் பரசுராம லிங்கேஸ்வரர், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர், குன்றத்துார் நாகேஸ்வர சுவாமி, உள்ளிட்ட சிவாலயங்களில், இன்று இரவு ௯:௦௦ மணி முதல் நாளை அதிகாலை ௫:௦௦ மணி வரை நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளன.
கலை நிகழ்ச்சிகள்:
*பொழிச்சலுார் அகத்தீஸ்வரர் கோவிலில் பள்ளி மாணவர்களின் சிவநாம ஜெபம், 108 திருவிளக்கு பூஜை, நாட்டியார்ப்பணா நடனப்பள்ளி மாணவியரின் பரத நாட்டியம், தாமரை கண்ணன் மற்றும் நல்லாசிரியர் இராமகிருஷ்ணன் ஆகியோரின் சொற்பொழிவு
*செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார் திருநீற்றீஸ்வரர் கோவிலில், சிவனடியார்களின் கயிலாய வாத்திய இசை நிகழ்ச்சி, சிவனும் வாழ்வும் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு, பன்னிரு திருமுறை பாராயணம்
*பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில், இன்று மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை பரதநாட்டிய நிகழ்ச்சி, 8:00 முதல் 10:00 மணி வரை சுகி. சிவத்தின் ஒளி பரவட்டும் ஆன்மீக சொற்பொழிவு, 10:00 முதல் 12:00 மணி வரை மெய் அருள் நந்தி சிவத்தின் சைவ சித்தாந்த சொற்பொழிவு, 12:00 முதல் 2:00 மணி வரை பக்திப்பாடல்கள், அதிகாலை 2:00 முதல் 5:00 மணி வரை தமிழ் நெஞ்சன் குழுவினரின் இறைவனை மக்கள் வேண்டுவது, உறவுகள்மகிழவா; வரவுகள் பெருகவா? பட்டிமன்றம்
*கொளத்தூர் சோமநாதேஸ்வரர் கோவிலில், இன்று மாலை 6:30 முதல் இரவு 3:30 மணி வரை தேவாரம், திருவாசகத்தில் இருந்து சிவதாண்டவம் குறித்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சி, இரவு 9:30 மணியிலிருந்து இரவு 11.00 மணி வரை திருப்புகழ் சொற்பொழிவு, 11:௦௦ மணியிலிருந்து அதிகாலை 2:௦௦ மணி வரை அண்ணாமலை மன்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேவாரம், திருப்புகழ் பாராயணம்,அதிகாலை 2:௦௦ முதல் 5:௦௦ மணி வரை கோவிலின் மன்ற உறுப்பினர்கள் திருவாசகம் முற்றும் ஓதல் வெள்ளித் தேரில்...
*மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில், இரவு 11:00 மணிக்கு, உற்சவர் தங்க ரிஷப வாகனத்தில் உலா
*பாரிமுனை தேவராஜ தெரு, சென்ன மல்லீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு கால பூஜையிலும் 108 கலசாபிஷேகம், சங்காபிஷேகம்
*பாரிமுனை தங்கசாலை தெரு, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், இரவு, வெள்ளித் தேரில் உற்சவர் உலா
*மண்ணடி கச்சாலீஸ்வரர் கோவிலில், அதிகார நந்தி வாகன உட்பிரகார புறப்பாடு, நாட்டியம், பாமாலை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள்
*திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில், இன்று மாலை 6:௦௦ மணி முதல் அதிகாலை வரை, சிறப்பு சொற்பொழிவு, நடன நிகழ்ச்சி, பக்தி இன்னிசை கச்சேரி
*திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில், சிறப்பு சொற்பொழிவுகள், நடன நிகழ்ச்சிகள்
*வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலில், இன்று காலை ௮:௦௦ மணிக்கு ஸ்ரீருத்ரம் மகந்யாசம், அபிஷேகம்
*மேற்கு தாம்பரம், செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் கோவிலில், இன்று மாலை 4:௩௦ முதல் 6:௦௦ மணி வரை அகரம் கோவிந்தன் மற்றும் சண்முகத்தின் நாதஸ்வர கச்சேரி; இரவு 7:45 மணி வரை, சிவராத்திரியின் மகிமைகள் - சொற்பொழிவு. இரவு ௮:௦௦ முதல், 9.30 மணி வரை கேரள செண்டை மேளம்; இரவு 9:45 முதல் 12:45 மணி வரை, இன்னிசை பக்தி பாடல்கள்; அதிகாலை 1:௦௦ மணி முதல் விடியற்காலை 5:௦௦ மணி வரை பஜனை
*மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர் கோவிலில், இன்று மாலை 6:௦௦ மணி முதல் இரவு வரை, பரதநாட்டிய நிகழ்ச்சி, கர்நாடக இசைக் கச்சேரி
*குன்றத்துார் நாகேஸ்வரர் கோவிலில், இரவு 9:௦௦ மணிக்கு யோகேஸ்வரி பிரபாகரமூர்த்தியின் ஜந்தெழுத்து அருமறை என்ற தலைப்பில் சொற்பொழிவு; இரவு 11:௦௦ மணிக்கு அறிவானந்தத்தின் சிவராத்திரி மகிமை என்ற தலைப்பில் சொற்பொழிவு; அதிகாலை 2:௦௦ மணிக்கு திருநாகேச்சரம் சிவனடியார் திருக்கூட்ட சபையின் தேவார, திருமுறை பாராயணம்.