Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் அங்காளம்மன் ... கங்காதரேசுவரர் கோயிலில் வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2014
05:02

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று இரண்டாம் நாள் திருவிழாவில் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனுக்காக அக்னி சட்டி எடுத்து வழிபட்டனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் மஞ்சலாற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலஸ்தானம் என்னும் குச்சிவீட்டின் கதவு திறக்கப்படுவது இல்லை. அடைக்கப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. பக்தர்கள் வழங்கும் நெய்யினால் ஆண்டு முழுவதும் இரவு, பகல் அணையாத நெய்விளக்கு எரிகிறது. இக்கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று முன்தினம் ராஜகம்பளத்தாரின் தேவராட்டத்துடன் பள்ளயம் ஆலயம் வந்தது. சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது.  இவ்விழாவில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய விடிய கண்விழித்து விரதம் இருந்து அம்மனை தரிசனம் செய்தனர். 2 நாள் நேற்று காலையில் இருந்து  பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக மஞ்சளாற்றங்கரையில் அக்னி வளர்த்து சட்டி ஏந்தி அம்மனுக்கு செலுத்தினர்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar