Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை திருப்பதி லட்டுக்கு ... விருதுநகர் கோயில் கலசத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொதிக்கிற நெய்யில் கையால் அப்பம் சுட்ட ஸ்ரீவி., மூதாட்டி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 மார்
2014
10:03

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி பத்திரகாளியம்மன் கோவிலில், சிவராத்திரியை ஒட்டி, 77 வயதான மூதாட்டி, கொதிக்கும் நெய் சட்டியில், கையால் அப்பம் சுட்டு, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தார். ஸ்ரீவில்லிபுத்தூர், முதலியார்பட்டி தெரு, பத்திரகாளியம்மன் கோவிலில், சிவராத்திரியை ஒட்டி, 47 ஆண்டுகளாக, கொதிக்கிற நெய் சட்டியில், கையால் அப்பம் சுட்டு, வழிபாடு நடந்து வருகிறது. நேற்று முன் தினம், பத்திரகாளியம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. விழாவில், நெய்யில் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி, நள்ளிரவு, 12:00 மணிக்கு நடந்தது. இதற்காக, ஸ்ரீவி., ஊரணிபட்டியைச் சேர்ந்த, 77 வயதான முத்தம்மாள், 90 நாட்கள் விரதமிருந்து, அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்தபடி, கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, சட்டியில் நெய் ஊற்றி, அப்பம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். முத்தம்மாளுக்கு, பக்தர்கள் மாவை பிசைந்து கொடுக்க, அவர், கொதிக்கிற நெய்யில், கரண்டி பயன்படுத்தாமல், கையாலேயே, அப்பத்தை புரட்டிப் போட்டு வேக வைத்தார். அப்பம் வெந்தவுடன், அவற்றை மீண்டும் கையாலே வெளியில் எடுத்தார். அவருக்கு உதவியாக கோவில் பூசாரிகள் இருந்தனர். தொடர்ந்து, 25 பெட்டி அப்பத்தை, தன் கையால், கொதிக்கிற நெய்யில் போட்டு எடுத்து, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். இதை காண, ஏராளமானோர் வந்திருந்தனர். கையால் சுட்ட அப்பம், பத்திரகாளியம்மனுக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு  ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar