துவரிமான்: துவரிமான் அக்ரஹாரத்திலுள்ள ரங்கநாத யதீந்தர மகாதேசிகன் பிருந்தாவனத்தில் மார்ச் 6ல் பூமிபூஜை நடக்கிறது.அகோபில மடத்தின் 40வது பட்டமாக விளங்கிய மகாதேசிகன், மதுரைக்கு யாத்திரை வந்த போது பரமபதம் அடைந்தவர். இங்கு ஆன்மிகப் பணிகளை மேற்கொள்ளும் விதத்தில், பிருந்தாவனத்தின் பின்பகுதியில் காம்ப்ளக்ஸ் கட்டும் பணி நடக்க இருக்கிறது. இதற்கான பூமிபூஜை மார்ச் 6, காலை 10.32 முதல் 11.08க்குள் நடக்கிறது.இந்த தகவலை செயலாளர் எஸ். வெங்கட்ராமன் தெரிவித்தார்.