நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2014 10:03
நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா, நேற்று கொடியேற்றத் துடன் துவங்கியது. இன்று பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 15 நாட்கள் நடைபெறும். நேற்று அம்மனுக்கும், கொடி கம்பத்திற்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், அர்ச்சனை நடந்தது.தொடர்ந்து அம்மன் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடி யேற்றப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரைபூஜாரிகள் சொக்கையா, சுப்புராசு, சின்னராசு, நடராசு மற்றும் செயல்அலுவலர் செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.இன்று காலை 10.30 மணிக்கு பக்தர்கள்நேர்த்திக்கடனுக்காக உலுப்பக்குடி கரந்தன் மலை கன்னிமார் தீர்த்தம் எடுத்துவருகின்றனர்.அரண்மனை சந்தனக்கருப்பு கோயிலில் வைத்து அர்ச்சனை செய்து, நகர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேம் செய்து, காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.