பதிவு செய்த நாள்
07
மார்
2014
12:03
பவானி: பவானி ஸ்ரீசெல்லியாண்டியம்மன் கோவில், மாசி திருவிழா, கடந்த, 18ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 25ம் தேதி, ஸ்ரீமாரியம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்ச்சியும், நான்காம் தேதி அம்மனுக்கு நீராட்டு விழாவும், ஐந்தாம் தேதி, பொங்கல் விழாவும் நடந்தது. நேற்று காலை, செல்லியாண்டியம்மன் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்த பின், பெண்களால் சீர்வரிசைகள் கொண்டு வரப்பட்டு, செல்லியாண்டியம்மனுக்கு திருமாங்கல்யம் சாற்றப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. பின், தேரில் வைக்கப்பட்ட உற்சவ அம்மனுடன் தேரோட்டம் நடந்தது. இதில் பவானி எம்.எல்.ஏ., நாராயணன், ஈரோடு மாவட்ட பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பழனிசாமி, அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணராஜ், தி.மு.க., நகர செயலாளர் நாகராசன், தாசில்தார் ராஜேஸ்வரி, இன்ஸ்பெக்டர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர். செல்லியாண்டி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், அக்ரஹாரம், மெயின் ரோடு, தேர் வீதி வழியாக சென்று, கோவிலை அடைந்தது.